close
Choose your channels

இயக்குனராகும் பாரதிராஜா மகன்.. ஹீரோ, தயாரிப்பாளர் யார் தெரியுமா?

Friday, March 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது முதன்முதலாக ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா ’தாஜ்மஹால்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனை அடுத்து அவர் ’சமுத்திரம்’ ’கடல் பூக்கள்’ ’அல்லு அர்ஜுனா’ ’வருஷமெல்லாம் வசந்தம்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான ’விருமன்’ என்ற திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் முதல் முதலாக இயக்குனராகியுள்ளார். மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் பாரதிராஜா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை வெண்ணிலா புரொடக்ஷன் சார்பில் இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் அவரது தந்தை பாரதிராஜாவே முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.