close
Choose your channels

பிக்பாஸ் அபிஷேக் இயக்கத்தில் பிரபல நடிகர்.. மாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

Tuesday, January 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் ராஜா இயக்கத்தில் பிரபல நடிகர் நடித்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் அபிஷேக் ராஜா. இவர் அந்த சீசனில் 21வது நாளில் வெளியேற்றப்பட்டார். ஆனால் மீண்டும் 47 வது நாளில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்தார் என்பதும் அதன் பின்னர் 63வது நாளில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அபிஷேக் ராஜா இயக்கத்தில் உருவான ’ஸ்டார்டா’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவில் பால சாரங்கன் இசையில் உருவாகிய இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் அபிஷேக் ராஜாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.