close
Choose your channels

கூகுள் பே மூலம் பிச்சை கேட்கிறார்கள்.. பிக்பாஸ் நடிகையின் அதிர்ச்சி தகவல்..!

Wednesday, March 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கூகுள் பே மூலம் பிச்சை கேட்கிறார்கள் என பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகை ஹினாகான் கூறி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் தான் காரில் சென்று கொண்டிருந்தபோது சிக்னலுக்காக காத்திருந்ததாகவும் அப்போது ஒருவர் யாசகம் கேட்டு தனது காரின் கதவை தட்டியதாகவும் அவரிடம் பணம் இல்லை என்று கூறியபோதும், யாசகம் கேட்பவர் ’பணம் இல்லை என்றால் பரவாயில்லை தயவு செய்து ஜிபே மூலம் பணம் அனுப்புங்கள், வீட்டில் என் தம்பி தங்கைகள் எல்லாம் பசியோடு காத்திருக்கின்றனர் என்று கூறியதைக் கேட்டதும் எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது என்று கூறினார்.

என்னிடம் எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் உடனே அவர் ’இதுதான் எனது ஜிபே நம்பர் என்று கூறியதாகவும் இதனை அடுத்து நான் அவருக்கு சில தொகைகள் பணம் அனுப்ப முயன்ற போது ’ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை சாமான்கள் வாங்குவதற்கான பணத்தை அனுப்புங்கள்’ என்று கூறியது என்னை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று கூறியுள்ளார்.

அந்த நபரிடம் நான் என்ன சொல்வது என்றே தெரியாமல் ஒரு தொகையை அவருடைய ஜிபே நம்பருக்கு அனுப்பினேன் என்று நடிகை கூறியிருப்பதற்கு நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.