close
Choose your channels

நயன்தாரா அறிக்கைக்கு பிக்பாஸ் பிரபலம் போட்ட கமெண்ட்.. என்ன தெரியுமா?

Friday, January 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’அன்னபூரணி’ படத்தால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து வருத்தம் தெரிவித்து நடிகை நயன்தாரா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த அறிக்கைக்கு பின்னர் ’அன்னபூரணி’ படப் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் நயன்தாராவின் இந்த அறிக்கைக்கு பலர் ஆதரவும் ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வரும் நிலையில் பிக் பாஸ் பிரபலம் ஷிவின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் அந்த கமெண்டில் ’என்னை பொருத்தவரை ஒவ்வொரு மதமும் மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்தையே கொண்டிருக்கிறது. சினிமா திரைப்படங்கள் மூலம் எந்த ஒரு மதத்திற்கும் பாதிப்போ, லாபமோ இருக்க வாய்ப்பில்லை’ என்று கமெண்ட் பதிவு செய்துள்ளார். இந்த கமெண்ட்க்கு ஏராளமான வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக ஷிவின் கலந்து கொண்டார் என்பதும் அவர் இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது ரன்னர் அப் என்ற இடத்தை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.