close
Choose your channels

போடு ஆட்டம் போடு.. திடீரென ஸ்வீட் உடன் கொண்டாடும் போட்டியாளர்கள்: என்ன விசேஷம்?

Friday, December 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் அதில் அனைத்து போட்டியாளர்களும் ஆட்டம் பாட்டத்துடன் ஸ்வீட் எடுத்து கொண்டாடி வருகின்றனர். இதற்கு காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி 7வது சீசன் ஆரம்பித்து 75 நாட்கள் நிறைவு பெற்றது என்பதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 75 நாள் நிறைவு பெற்றதை அடுத்து பிக்பாஸ் ஸ்வீட் அனுப்பியுள்ள நிலையில் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுகின்றனர். மேலும் ஹேப்பி 75 என்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்

’போடு ஆட்டம் போடு நம்ம ஜெயிக்க யாரும் இல்லை’ என அனைத்து போட்டியாளர்களும் ஒன்று சேர்ந்து பாட்டு பாடி ஆட்டம் ஆடுகின்றனர். இந்த ஷோ தனது கனவு என்று நெகிழ்ச்சியுடன் விஷ்ணு பேசுகிறார். ’பாசிட்டிவா மாறிட்டே வர்ற மாதிரி எனக்கு ஒரு உணர்வை தருகிறது, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது, இதே மகிழ்ச்சியுடனே எப்போதும் இருங்கள்’ என்று கேப்டன் மணி சக போட்டியாளர்களுக்கு வாழ்த்து கூறுகிறார்.

இன்றைய 75 வது நாளிலாவது சண்டை சச்சரவு இன்றி போட்டியாளர்கள் இருப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.