close
Choose your channels

நீச்சல் குளத்தில் செம்ம கிளாமர்.. பிக்பாஸ் ரைசா வில்சன் ஹாட் புகைப்படங்கள்..!

Friday, April 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் நடிகையும் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

தனுஷ் நடித்த ’வேலையில்லா பட்டதாரி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரைசா வில்சன். இதனை அடுத்து அவர் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக இருந்தார் என்பதும் அதில் அவர் 65 நாட்கள் வரை தாக்குப் பிடித்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலம் காரணமாக ’பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நாயகியாக நடித்தார் என்பதும் அதன் பிறகு ’தனுஷூ ராசி நேயர்களே’ 'பொய்க்கால் குதிரை’ ’காபி வித் காதல்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தார். தற்போது அவர் நான்கு தமிழ் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சனுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் நீச்சல் குளத்தில் கருப்பு காஸ்டியூமில் இருக்கும் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.