close
Choose your channels

கார் வாங்கியவுடன் அடித்த அதிர்ஷ்டம்.. திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற பிக்பாஸ் ரக்‌ஷிதா..!

Tuesday, April 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரக்‌ஷிதா சமீபத்தில் கார் வாங்கிய நிலையில் கார் வாங்கிய அதிர்ஷ்டத்தில் அவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது

தொலைக்காட்சி சீரியலில் பிரபலமானவர் ரக்‌ஷிதா மஹாலக்ஷ்மி என்பதும் ’பிரிவோம் சந்திப்போம்’ ’சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட பல சீரியல்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘உப்பு கருவாடு’ என்ற தமிழ் படத்திலும் இரண்டு கன்னட படத்திலும் ரக்‌ஷிதா நடித்துள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்‌ஷிதா கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார் என்பதும் 91 நாட்கள் அவர் தாக்கு பிடித்து விளையாடினார் இருப்பதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரக்‌ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து உள்ளார். பிரவீன் கிருஷ்ணா ராஜா என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் ’மெய் நிகரே’ என்ற திரைப்படத்தில் தான் ரக்‌ஷிதா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ரூ இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரக்‌ஷிதா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த ரக்‌ஷிதாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.