close
Choose your channels

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 'கோலி சோடா' நடிகர்?

Monday, August 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் அவ்வப்போது கசிந்து வருகிறது.

குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கனி, சுனிதா உள்ளிட்ட ஒருசிலர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. அதேபோல் சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர் நடிகைகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி விஜய் மில்டன் இயக்கிய ’கோலிசோடா 2’ என்ற படத்தில் சிவா என்ற கேரக்டரில் நடித்த நடிகர் சிவா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சிவா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.