close
Choose your channels

ஹீரோவாகிறார் பிக்பாஸ் 6 போட்டியாளர்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

Wednesday, May 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தமிழ் திரையுலகில் ஹீரோவாக உள்ளார் என்றும் அவர் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் திரையுலகில் தற்போது நடித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி, விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ரக்சிதா உட்பட மேலும் சில போட்டியாளர்கள் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரை தாக்குப் பிடித்து அதன் பின்னர் 3 லட்ச ரூபாய் பண பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியவர் விஜே கதிரவன். தற்போது இவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாகியுள்ளார்.

விஜே கதிரவன் நடிக்கும் திரைப்படத்திற்கு ’கூடு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தை ஜோயல் விஜயன் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள விஜே கதிரவன் ’எனது முதல் படம் இது என்றும் இந்த படம் வெற்றி பெற உங்களது வாழ்த்துக்கள் தேவை’ என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.