close
Choose your channels

'என் ரசிகரின் அம்மா, என்னோட அம்மா மாதிரி': சூரியின் நெகிழ்ச்சி வீடியோ..!

Wednesday, May 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’என்னுடைய ரசிகரின் அம்மா என்னோட அம்மா மாதிரி’ என சூரி நெகிழ்ச்சியுடன் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் சூரி சமீபத்தில் மதுரை வந்தபோது அவரது ரசிகர்களில் ஒருவர் அம்மா உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்தது குறித்து தகவல் கேட்டார். இதையடுத்து அவரை நேரில் சந்திக்க ஆட்டோவில் அவரது வீட்டிற்கு சென்றார். தனது ரசிகரின் அம்மாவை நேரில் சந்தித்து அவரது உடல் நலம் விசாரித்த சூரி, ‘உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். அதன் பிறகு அவர் ’என்னுடைய ரசிகரின் அம்மா என்னோட அம்மா மாதிரி’ என்று கூறியதோடு தனது ரசிகரின் உறவினர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதனையடுத்து அவர் மீண்டும் ஆட்டோவில் அந்த இடத்தில் இருந்து கிளம்பினார். நடிகர் சூரி தனது அம்மாவின் உடல் நிலையை விசாரிக்க நேரில் வந்ததை எடுத்து அந்த ரசிகர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் ’கொட்டுக்காளி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.