close
Choose your channels

அவனுக்கு வாழ்க்கையில வேலையே இல்லையா? மீண்டும் ஆவேசமாகும் அக்சரா!

Wednesday, December 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய 2 புரோமோ வீடியோவிலும் அக்சரா ஆவேசமடைந்து பிரியங்கா மற்றும் ராஜுவிடம் வாக்குவாதம் செய்த நிலையில் மூன்றாவது புரோமோ வீடியோவிலும் அவர்தான் ஆவேசமாக பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது

இன்றைய டாஸ்க்கிற்கான பெட்டியை ஓங்கி அடிக்கும் அக்சரா ஆத்திரத்துடன் இருப்பதை பார்த்து அவருக்கு வருண் அறிவுரை கூறுகின்றனர். அக்சரா ஆவேசப்படுவதை பார்த்து பிரியங்கா மிகவும் மகிழ்ச்சியோடு கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருக்கிறார்

இந்த நிலையில் வருணிடம் அக்சரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். என் பின்னாடியே எதற்காக அவன் வருகிறான்? அவனுக்கு வேற வேலையே இல்லையா? வாழ்க்கையில அவனுக்கு வேலையே இல்லையா? நான் அவனிடம் அவ்வளவு சீரியசாக பேசிக் கொண்டிருக்கிறேன், அப்பகூட நடுவுல வந்து நான் பேசுவதை நீ கேட்கணும் என்றுதான் கூறுகிறான்’ என்று தனது ஆதங்கத்தை வருணிடம் தெரிவிக்கிறார்

மொத்தத்தில் இன்றைய மூன்று புரமோவிலும் அக்சரா ஆவேசமாக பேசியதை பார்க்கும் போது இன்றைய நாள் அக்சரா நாள் போல் தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.