close
Choose your channels

தீபாவளி கொண்டாட்டத்தில் கண்கலங்கிய பிரியங்கா, ராஜூ!

Thursday, November 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் வீட்டில் இன்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெறுகிறது என்பதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பிக்பாஸ் போட்டியாளர்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் ‘இந்த பிக் பாஸ் வீட்டில் தீபாவளியை கொண்டாடும் ஒவ்வொருத்தருக்கும் உங்களுக்குப் பிடித்தமானவர்கள் உங்களுக்கு பிடித்த உணவை அனுப்பி உள்ளனர் என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

இதனை அடுத்து அவரவர்களுக்கு பிடித்த உணவு வந்து சேர்கிறது. அப்போது பிரியங்காவுக்கு அவருடைய அம்மா அவருக்கு பிடித்த உணவை அனுப்பியதை அடுத்து அவர் தனது அம்மாவுக்கு ஆனந்தக்கண்ணீருடன் நெகிழ்ச்சியாக நன்றி கூறுகிறார்.

அதேபோல இமான் அண்ணாச்சி வீட்டில் இருந்து உணவு மற்றும் லெட்டர் வந்திருக்கும் நிலையில் அந்த லெட்டரை ஒரு கட்டத்திற்கு மேல் படிக்க முடியாமல் வார்த்தையே வரவில்லை என அவர் கூறுகிறார். அதேபோல் ராஜூ வீட்டிலிருந்து வஞ்சிரம் மீன் மற்றும் முட்டை பிரியாணி வந்திருக்கும் நிலையில் அதை பார்த்ததும் அவரும் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் சிந்துகிறார்.

மொத்தத்தில் இன்று பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்கள் அனுப்பிவைத்த உணவுடன் நெகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.