close
Choose your channels

புதுசா பாவனிக்கு ஒரு அடிமை வந்திருக்காங்க: சொன்னது யார் தெரியுமா?

Monday, December 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாவனிக்கு புதுசா ஒரு அடிமை வந்து இருக்காங்க என அக்சரா கூறியிருக்கும் காட்சி இன்றைய அடுத்த புரமோவில் உள்ளது.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் அந்த வாரத்திற்கான நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்றைய நாமினேஷன் படலத்தில் போட்டியாளர்கள் சக போட்டியாளர் இருவரை நாமினேஷன் செய்கின்றனர்.

அந்த வகையில் இந்த வார நாமினேஷனில் முதலாவதாக நிரூப்பை நாமினேட் செய்கிறார் அமீர். அதன் பின்னர் வரும் அக்சரா, பிரியங்காவையும் பாவனியையும் நாமினேட் செய்கிறார். பிரியங்கா தன்னை டிரிகர் செய்வதாகவும், பாவனிக்கு புதுசா அமீர் என்ற அடிமை கிடைத்திருப்பதாகவும் அவர் காரணமாக கூறுகிறார்.

இதனை அடுத்து வரும் நிரூப், பிரியங்காவை நாமினேசன் செய்கிறார். தேவையில்லாமல் பழிவாங்கும் கொள்கையில் பிரியங்கா இருப்பதாக அவர் காரணம் கூறுகிறார். பாவனியை சிபியும் நாமினேட் செய்கிறார். அபினய் விஷயத்தை அவர் முன்னாடியே சொல்லி இருக்கலாம் என்றும் தேவையில்லாமல் பெரிதாக்கியதாகவும் சிபி அதற்கான காரணத்தை தெரிவிக்கிறார். இதனை அடுத்து வரும் ராஜூவும் பாவனியை நாமினேட் செய்கிறார். சின்ன சின்ன விஷயத்தை பெரிதாக்குகிறார் பாவனி என அவர் காரணம் கூறுகிறார்.

இதனை வைத்து பார்க்கும்போது பிரியங்கா, பாவனி, நிரூப் ஆகிய மூவரும் நாமினேஷனில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் யாரெல்லாம் நாமினேஷனில் உள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.