close
Choose your channels

அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் வில்லனா?

Wednesday, September 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் பெற்ற நடிகர், அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அஜீத் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் மெயின் வில்லனாக சஞ்சய் தத் நடிக்க இருப்பதாகவும் நாயகியாக த்ரிஷா மற்றும் ஹுமா குரேஷி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது அதுமட்டுமின்றி இந்த படத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இன்னொரு வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதிலாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதலாவது சீசன் டைட்டில் வின்னர் ஆரவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மகிழ் திருமேனி இயக்கிய முந்தைய படமான ‘கலக தலைவன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.