close
Choose your channels

தனுஷின் அடுத்த படத்தில் இணைகிறார் பாலிவுட் நடிகை.. முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதை..!

Tuesday, September 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷின் அடுத்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதை அம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

தனுஷ் தற்போது ’டி50’ என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து தனுஷ் நடிக்க இருக்கும் ’டி51’ படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தனுஷ் ’டி52’ திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் என்பவர் இயக்க இருக்கிறார். 'TERE ISHK MEIN’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் தற்போது தனுஷ் ஜோடியாக கைரா அத்வானி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் முழுக்க முழுக்க விமான படையை பின்புலமாக கொண்ட காதல் படம் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தொடங்கும் என்றும் அதனை அடுத்து சென்னை உள்பட பல இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.