close
Choose your channels

பிக்பாஸ் வீட்டிற்குள் திடீரென வந்த இருவர்.. யார் அவர்கள்.. களைகட்டும் வீடு..!

Friday, January 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி 95 நாள் முடிவடைந்து இன்று 96 வது நாள் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு திடீரென இரண்டு பேர் வந்துள்ளது போட்டியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டின் கதவு இன்று திறந்தவுடன் அதில் விஜய் டிவியில் விரைவில் ஆரம்பிக்க இருக்கும் ’சின்ன மருமகள்’ என்ற தொடரில் நடிக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயின் உள்ளே வந்தனர்.

’பிக் பாஸ் பாக்குறீங்களா என விஷ்ணு, ஹீரோவிடம் கேட்க ‘நீ இருக்கையில, அதை எப்படி பார்க்காமல் இருப்பேன்’ என்று கூறுகிறார். ’இப்படியே சொல்லி சொல்லி’ என்று விஷ்ணு புலம்புகிறார்.

இந்த நிலையில் ’சின்ன மருமகள்’ ஹீரோயின் மாயாவிடம் ’எங்க உங்க பிரண்ட்’ என கேட்க, அதற்கு மாயா ‘போயிட்டாங்க’ என்று சோகத்துடன் கூறுகிறார். இதனை அடுத்து ஹீரோயின் போட்டியாளர்கள் மத்தியில் பேசியபோது, ‘நான் ’சின்ன மருமகள்’ என்ற சீரியலில் ஹீரோயினாக நடிக்கிறேன், நான் ஸ்கூல் படிக்கிற ஒரு பொண்ணு, இவர்தான் ஹீரோ’ என்று கூற எல்லோரும் சீரியல் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு பிக்பாஸ் ஆறாவது சீசனில் இதே போல் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் ஹீரோ வெற்றிச்செல்வன் மற்றும் ஹீரோயின் கோமதி பிரியா வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.