close
Choose your channels

'சியான் 62' படப்பிடிப்பு எப்போது? விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு குஷி தகவல்..!

Saturday, December 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விக்ரம் நடித்த ’துருவ நட்சத்திரம்’ மற்றும் ’தங்கலான்’ ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 62 வது திரைப்படத்தை எஸ்யு அருண்குமார் இயக்க உள்ளார் என்ற படத்தை பார்த்தோம்.

சமீபத்தில் வெளியான ’சித்தா’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கி அருண்குமார் அடுத்ததாக விக்ரமுடன் கைகோர்த்ததை அடுத்த இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

’சித்தா’ போலவே ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.