close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் ரீ எண்ட்ரி ஆகும் சின்னிஜெயந்த்

Tuesday, February 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கெளதம் கார்த்திக் ஆகியோர் முதன்முதலாக இணைந்து நடிக்கும் திரைப்படம் 'முத்துராமலிங்கம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஜதுரை இயக்கி வரும் இந்த படத்தை குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது குற்றாலம் பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று முதல் பிரபல நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்த், படக்குழுவினர்களுடன் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிப்பதாகவும், நீண்ட இடைவெளிக்கு பின்னர் சின்னிஜெயந்த், தமிழ் படம் ஒன்றில் ரீ எண்ட்ரி ஆகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கார்த்திக், கெளதம் கார்த்திக், கேதரின் தெரசா, ப்ரியா ஆனந்த், பிரபு, சுமன், விவேக், ராதாரவி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு செந்தில்குமார் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்கின்றனர். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். சமீபத்தில் இசைஞானியின் இசையில் இந்த படத்திற்காக கமல்ஹாசன் ஒரு பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.