close
Choose your channels

குக் வித் கோமாளியில் இந்த வாரம் எலிமினேஷன் ஆவது செஃப் ஆ?

Saturday, May 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு கடந்த மூன்று சீசன்கள் போலவே மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த சீசனில் 10 குக்குகள் கலந்து கொண்ட நிலையில் அவர்களில் கிஷோர் ராஜ்குமார், காளையன், ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஷெரின் ஆகிய ஐந்து குக்குகள் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கஜேஷ் மற்றும் கிரன் ஆகிய இருவரும் வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் வாரம் என்பதால் தற்போது இருக்கும் 7 குக்குகளில் யார் எலிமினேஷன் ஆவார் என்ற தகவல் தற்போது கசிந்து உள்ளது. ஸ்ருஷ்டி இந்த வாரம் இம்யூனிட்டி பெற்றுள்ளதால் அவர் எலிமினேஷனில் இருந்து தப்பியுள்ளார். இதனை அடுத்து சமீபத்தில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த நாகேஷ் பேரன் கஜேஷ் தான் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. கஜேஷ் செஃப் படிப்பு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் கடந்த இரண்டு வாரங்களாக சரியாக செயல்படவில்லை என்றும் அவருடைய சமையல் டிஷ்கள் நடுவர்களால் விமர்சனம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நாளைய நிகழ்ச்சியில் கஜேஷ் எலிமினேஷன் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.