close
Choose your channels

இருக்கும்போது மருத்துவ உதவி, இறந்தபின் இறுதிச்சடங்கு.. தமிழ் நடிகருக்கு உதவிய டி இமான்..!

Thursday, June 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'படிக்காதவன்’ உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் துணை நடிகராக நடித்த நடிகர் பிரபு புற்றுநோயால் காலமானதை அடுத்து அவருக்கு இறுதி சடங்கு செய்ய இசையமைப்பாளர் டி இமான் உதவி செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக புற்றுநோய் பாதிப்புடன் ஆதரவற்ற நிலையில் இருந்த துணை நடிகர் பிரபுவுக்கு இசையமைப்பாளர் டி. இமான் மருத்துவ உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி நடிகர் பிரபு நேற்று காலமான நிலையில் அவரது இறுதிச் சடங்கிற்கு முழு உதவியும் டிமான் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி இடுகாடு வரை சென்று அவருக்கு செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளையும் இமான் செய்தார் என்பதும் மின்சார மயானத்தில் கொள்ளி வைப்பது உட்பட அனைத்து சடங்குகளையும் அவர் செய்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இடஹ்னை அடுத்து மனிதநேயத்துடன் செயல்பட்ட இசையமைப்பாளர் டி இமானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos