close
Choose your channels

'காலா' ஜீப்பை மஹிந்திரா ஓனருக்கு பரிசாக அளித்த தனுஷ்

Thursday, June 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காலா ஜீப்பை மஹிந்திரா ஓனருக்கு பரிசாக அளித்த தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் இன்று வெளியாகி உலகம் முழுவதும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரஜினி ரசிகர்கள் உள்பட அனைவரும் இந்த படத்தை கொண்டாடி சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் 'காலா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியான அன்று, ரஜினி உட்கார்ந்திருந்த மஹிந்திரா நிறுவனத்தின் தார் (Thar) ஜீப்பை, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தனக்கு நினைவுப்பரிசாக தரும்படி சமூக வலைத்தளம் மூலம் படக்குழுவினர்களிடம் கேட்டிருந்தார். இதன்படி இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அந்த ஜீப்பை மஹிந்திரா உரிமையாளருக்கு பரிசாக கொடுத்துள்ளார். இதற்காக மஹிந்திரா உரிமையாளர் தனுஷுக்கு தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்

இந்த ஜீப் தற்போது சென்னையில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஜீப்பில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட ஊழியர்கள் ரஜினி போஸ் கொடுத்து உட்கார்ந்து புகைப்படம் எடுத்து வருகின்றனர். 'காலா' படத்திற்கு சரியான புரமோஷன் இல்லை என்று ஒருசிலர் குற்றஞ்சாட்டி வந்தனர். ஆனால் இந்த படத்திற்கு தற்போது இதுபோன்ற இலவச புரமோஷன்கள் அதிகமாக கிடைத்து வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.