close
Choose your channels

மணிரத்னம் படத்தின் இந்தி ரீமேக்கில் தனுஷ்?

Saturday, July 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குன மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1988ஆம் வருடம் வெளிவந்த திரைப்படம் 'அக்னி நட்சத்திரம்'. கார்த்திக், பிரபு ஆகிய இருவரும் மோதும் சகோதரர்களாக நடித்திருந்த இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 28 வருடங்கள் கழித்து இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் இன்னொரு முக்கிய வேடத்தில் பிரபல இந்தி நடிகர் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே 'ராஜண்ணா' மற்றும் 'ஷமிதாப்' ஆகிய இரண்டு இந்தி படங்களில் நடித்துள்ள தனுஷூக்கு இது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மற்ற விபரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
தனுஷ் தற்போது 'வடசென்னை' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் 'அக்னி நட்சத்திரம்' ரீமேக்கில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.