close
Choose your channels

தனுஷ் பட நாயகிக்கு கொரோனா பாசிட்டிவ்: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

Friday, April 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜெகமே தந்திரம்’ என்ற படத்தின் நாயகிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்கள் வெளிவந்துவிட்டன.

தனுஷ் நடித்த ’ஜெகமே தந்திரம் படத்தில் நாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ உட்பட ஒரு சில படங்களில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா லட்சுமிக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவர் தன்னுடைய கேரளா வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவரின் அறிவுரைப்படி முறையான சிகிச்சை பெற்று கொண்டிருப்பதாகவும் விரைவில் அவர் கொரோனாவில் இருந்து குணமாகி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழ் திரை உலகில் உள்ள பலருக்கு வரிசையாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.