close
Choose your channels

தனுஷின் இயக்கத்தில் 2வது திரைப்படம்.. 'D50' படத்தின் முக்கிய அப்டேட்..!

Friday, December 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷின் 50வது திரைப்படமும் அவரது இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது திரைப்படமுமான ’D50’ திரைப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முக்கிய அப்டேட்டை அவரே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் இயக்கத்தில் உருவான ’பா பாண்டி’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் இயக்கத்தில் உருவாகும் 2வது படத்தில் தனுஷ் உடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷான், துல்கர் சல்மான், அனிதா சுரேந்திரன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். வடசென்னை பின்னணியாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்றதாகவும் இந்த படத்தின் பல பிடிப்புக்கு முழுமையான ஒத்துழைப்பு தந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர்களுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் ’D50’ திரைப்படமும் அதற்கு அடுத்த ஒரு சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் அடுத்ததாக மூன்றாவது திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் அவரது நெருங்கிய உறவினர் வருண் ஹீரோவாக நடித்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.