close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், ஷங்கர் வரிசையில் இணைந்த தனுஷ்

Friday, October 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் தனது திறமையை நிரூபித்து, தேசிய விருதும் பெற்ற தனுஷின் வளர்ச்சி படிப்படியாக வளர்ந்து, தற்போது உச்சத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் உலகில் உள்ள கோடீஸ்வரர்கள் வைத்திருக்கும் மதிப்புமிக்க ரோல்ஸ் ராய்ஸ் காரை தனுஷ் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்த்ருப்பதையே ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டு வரும் நிலையில் தனுஷுக்கும் அந்த பெருமை கிடைத்துள்ளது.

இந்த காரை தமிழ்த்திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர், விஜய் ஆகிய மூவர் மட்டுமே வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனுஷ் தற்போது இந்த பட்டியலில் இணைந்துள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.6 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு 106 என்ற எண்ணை பதிவு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.