close
Choose your channels

கூடங்குளத்துடன் கனெக்ஷன் ஆன தனுஷ் படம்

Wednesday, July 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதன்முதலாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் தனுஷ் நடித்த 'கொடி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்து இதுவரை வெளிவராத தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருவதை கேள்விப்பட்டுள்ளோம். கிட்டத்தட்ட அதேபோன்ற கதைதான் தனுஷி 'கொடி' படம் என்று கூறப்படுகிறது. கிராமம் ஒன்றின் அருகே அணு உலை அமைக்க முயற்சிகள் நடப்பதும் அதற்கு அந்த பகுதி கிராம மக்கள் எதிர்ப்பதும்தான் கதை இறுதியில் என்றும் அணு உலை அமைந்ததா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ் என்றும் கூறப்படுகிறது.
தனுஷ், த்ரிஷா இருவருமே அரசியல்வாதியாக நடித்துள்ள இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'எதிர்நீச்சல், 'காக்கி சட்டை' பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.