close
Choose your channels

தனுஷின் 'கொடி' ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு

Thursday, August 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து முடித்துள்ள 'கொடி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி எந்த நேரமும் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.,
இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 6.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியால் தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'எதிர்நீச்சல், 'காக்கி சட்டை' பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ப்ரவீன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.