close
Choose your channels

பெண்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்படும் படம் இதுதான்

Wednesday, October 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தயாராகியுள்ள 'தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பிவிஆர் திரையரங்கில் அக்டோபர் 6ஆம் தேதி மதியம் 2.30 மணி காட்சி முழுக்க முழுக்க பெண்களுக்காக மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிக்கு மிக வேகமாக ரிசர்வேஷன் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த காட்சிக்கு வருகை தரும் பெண் ரசிகைகள் அனைவருக்கும் திரையரங்கில் ஸ்நாக்ஸ் மற்றும் காபி இலவசமாக வழங்கப்படும் என்றும் அந்த திரையரங்கின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காரைக்குடியில் உள்ள திரையரங்கில் விஜய்யின் 'தெறி' படம் பெண்களுக்காக ஒரு காட்சி திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.