close
Choose your channels

சூர்யாவுக்காக பக்கா மாஸ் ஸ்கிரிப்ட் ரெடி: பிரபல இயக்குனர்

Thursday, May 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே' திரைப்படமும், இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய 'காப்பான்' திரைப்படமும் அடுத்தடுத்த ஒரு சிறு இடைவெளியில் வெளியாகவுள்ளது. மேலும் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் 'சூரைக்காற்று' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி இயக்குனர் சிவா இயக்கும் அடுத்த படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார். எனவே சூர்யாவுக்கு தொடர்ச்சியாக நான்கு ஹிட் படங்கள் தயாராக இருப்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று தல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபல இயக்குனர் பாண்டிராஜிடம் ரசிகர் ஒருவர், 'சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்குங்கள்' என்று வேண்டுகோள் விடுக்க அதற்கு பதலளிக்கும் வகையில் இயக்குனர் பாண்டிராஜ் கூறியதாவது:

பக்கா, மாஸ், கிராமப்புற, ஆக்சன், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஒரு ஸ்க்ரிப்ட் தயாராகி வருகிறது என கூறியுள்ளார். எனவே சூர்யாவுக்கு இன்னொரு ஹிட் படமும் தயாராகி வருவதால் இனிவரும் இரண்டு வருடங்கள் தமிழ் சினிமாவில் சூர்யாவின் வருடமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.