close
Choose your channels

இயக்குனர் ராமின் 'தரமணி' டீசர் ரிலீஸ் தேதி

Saturday, May 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீவா, அஞ்சலி நடித்த 'கற்றது தமிழ்', தங்க மீன்கள் ஆகிய தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ராம் இயக்கி வந்த அடுத்த படமான 'தரமணி' படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.


ஐ.டி. ஊழியர்கள் குறித்த கதையம்சம் கொண்டதாக கருதப்படும் இந்த படத்தின் டீசர் இம்மாதம் 21ஆம் தேதி வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் வசந்த் ரவி, அழகம்பெருமாள் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடிகை அஞ்சலியும் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இயக்குனர் ராம் தற்போது மிஷ்கினுடன் 'சவரக்கத்தி' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஜி.ஆர்.ஆதித்யா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.