close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த திமுக அமைச்சர்: என்ன காரணம்..?

Monday, July 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திமுக அமைச்சர் சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்த நிலையில் திருவண்ணாமலை திமுக மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் எ.வா. வேலு, ரஜினியை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்த போது புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் செல்வம் தனது மகளுடன் ரஜினிகாந்த்தை சந்தித்தார் என்பதும் தெரிந்தது. அதேபோல் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரா பிரியங்கா என்பவர் தனது மகன்களுடன் சென்று ரஜினிகாந்த்தை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.