close
Choose your channels

பின்னாடி பாக்காதீங்க… முதுகை திருப்பி இளம் நடிகை கொடுத்த வைரல் போஸ்!

Thursday, March 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகவும் பேசப்பட்ட திரைப்படம் “அர்ஜுன் ரெட்டி” இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஷாலினி பாண்டே. மேலும் இந்த படத்தில் பேசப்படும் படியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த அவர் தெலுங்கு சினிமாவை தவிர தமிழ், இந்தி எனப் பல மொழிகளிலும் கவனம் பெறும் நடிகையாக மாறிவிட்டார்.

முன்னதாக தெலுங்கு சோனி தொலைக்காட்சி தொடர்களிலும் நடிகை ஷாலினி பாண்டே நடித்துள்ளார். அவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எதற்காகவும் வாழ்க்கையை திரும்பி பார்க்காதீர்கள். ஒருவேளை மிட்டாய் கிடைப்பதாக இருந்தால் மட்டும்“ எனக் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் நடிகை ஷாலினி பாண்டே கடற்கரையில் அமர்ந்து கொண்டு தனது முதுகுப் புறத்தை காட்டுவது போல இருக்கிறது. இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பலரையும் ஈர்த்து இருக்கிறது. தமிழில் “100%காதல்“, “கொரில்லா“, “அக்னிசிறகுகள்“ போன்ற படங்களில் இவர் நடித்து இருந்தார். மேலும் இவர் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.