close
Choose your channels

அனிமல் ஸ்டார் சாம்பார் ராசன் நடிக்கும் 'மாட்டுக்கு நான் அடிமை'

Friday, August 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜல்லிக்கட்டு போராட்டம் வந்தாலும் வந்தது ஜல்லிக்கட்டை மையமாக வைத்தே பல படங்களின் போஸ்டர்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஜல்லிக்கட்டுக்கு கிடைத்த பொதுமக்களின் ஆதரவு இந்த படங்களுக்கும் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவெ ஜல்லிக்கட்டை மையமாக வைத்து தளபதி விஜய்யின் 'மெர்சல்', 'விஜய்சேதுபதியின் 'கருப்பன்', மற்றும் சண்முகபாண்டியனின் 'மதுரை வீரன்' போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்த படங்களின் போஸ்டர்களில் ஜல்லிக்கட்டின் பாதிப்பு தெரிந்த நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் ஜல்லிக்கட்டு சாயல் தெரிந்துள்ளது.

'மாட்டுக்கு நான் அடிமை' என்பதுதான் படத்தின் டைட்டிலாம். இதில் நடித்திருப்பவர் மாடுகளின் தோழனாய் அனிமல் ஸ்டார் சாம்பார் ராசன் என்பவராம். படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரித்திக்ரோஷன் பிலிம் ஃபார்மர்ஸ். படத்தின் போஸ்டரில் ஹீரோ கோவணத்துடன் உள்ளார். இன்னும் எத்தனை படம் ஜல்லிக்கட்டு பெயரால் வரவுள்ளது என்பதை பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.