close
Choose your channels

தான் நடித்த படத்தை ஆட்டோவில் வந்து பார்த்த பிரபல தமிழ் நடிகை!

Friday, December 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் நடிகை தான் நடித்த திரைப்படத்தை தியேட்டரில் ஆட்டோவில் வந்து ரசிகர்களுடன் பார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஆர்.ஆர்.ஆர். என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் நடித்த படங்களில் ஒன்று ’கமணம்’. இயக்குனர் சுஜானா ராவ் இயக்கிய இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தை ரசிகர்களுடன் பார்க்க திரையரங்குக்கு ஆட்டோவில் ஸ்ரேயா சரண் வந்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிய இந்த படத்தில் ஸ்ரேயா சரண் உடன் பிரியங்கா ஜவால்கர், நித்யா மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.