close
Choose your channels

ஜாலியான வெளிநாட்டு டூர்.. கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனின் வைரல் புகைப்படங்கள்..!

Monday, September 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கௌதம் கார்த்திக் தனது மனைவி மஞ்சிமா உடன் வெளிநாட்டு டூர் சென்ற புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகன் இணைந்து ’தேவராட்டம்’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனை அடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி இரு தரப்பு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு தமிழ் திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்த கௌதம் கார்த்திக் தற்போது ஜாலியான வெளிநாட்டு டூர் சென்றுள்ளார். அவர் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபஸ்ட் என்ற நகருக்கு டூர் சென்றுள்ள நிலையில் அங்கிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்கள் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் தற்போது ’கிரிமினல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.