close
Choose your channels

'கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் புதிய ரிலீஸ் தேதி

Thursday, November 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய 'கடவுள் இருக்கான் குமாரு' படம் பல தடைகளை கடந்து நாளை வெளியாக இருந்தது. ஆனால் திடீரென பாரத பிரதமரின் அதிரடி அறிவிப்பு காரணமாக கடைசி நேர செட்டில்மெண்ட் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படம் அடுத்த வாரம் அதாவது நவம்பர் 17-ல் ரிலீஸ் ஆகும் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் டி.சிவா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நவம்பர் 17-ல் விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' திரைப்படமும் வெளியிட திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.