close
Choose your channels

தங்கியிருந்த ஹோட்டலில் ரகசிய கேமிரா.. ஜிவி பிரகாஷ் பட நாயகியின் அதிர்ச்சி அனுபவம்..!

Wednesday, August 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தபோது அந்த ஓட்டலில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பிரபல ஹோட்டல்கள், நட்சத்திர ஹோட்டல்களில் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து தான் நடிகர் நடிகைகள் அங்கு தங்குகின்றனர். ஆனால் நட்சத்திர ஓட்டலில் வேலை செய்யும் சிலர் ரகசிய கேமராவை வைத்து அதில் பதிவாகும் வீடியோவை லீக் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடித்த ’புரூஸ்லீ’ என்ற படத்தில் நாயகியாக நடித்த நடிகை நடிகை க்ரித்தி கர்பந்தா என்பவர் சமீபத்தில் கன்னட படம் ஒன்றின் படப்பிடிப்புக்கு சென்ற போது பெங்களூர் ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும் அப்போது அந்த ஓட்டலில் ரகசிய கேமரா இருந்ததை கண்டு பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எப்போதும் ஒரு ஓட்டலில் நாங்கள் தங்கும் போது ஹோட்டல் அறையில் நுழைந்தவுடன் ரகசிய கேமரா இருக்கிறதா என்பதை சோதனை செய்வோம், அவ்வாறு சோதனை செய்தபோது தான் பெங்களூரில் உள்ள ஒரு ஹோட்டலில் ரகசிய கேமரா இருந்ததை கண்டுபிடித்து விட்டு உடனடியாக அந்த ஓட்டலை விட்டு வெளியேறினேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.