close
Choose your channels

'கடவுள் இருக்கான் குமாரு' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

Wednesday, September 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் தீபாவளி ரேசில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை ஜி.வி.பிரகாஷ்குமார் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.