close
Choose your channels

விஷால்-கார்த்தியுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

Tuesday, September 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் தீபாவளி திருநாளில் விஷால் நடித்த 'கத்திச்சண்டை' மற்றும் கார்த்தி நடித்த 'காஷ்மோரா' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனுஷ் நடித்த 'கொடி' படமும் அதே தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளி ரேசில் தற்போது ஜி.வி.பிரகாஷூம் இணைந்துள்ளார். எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து இசையமைத்து வரும் 'கடவுள் இருக்கான் குமாரு' படமும் தீபாவளி ரிலீஸ் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் 'வேதாளம்', 'தூங்காவனம்' என இருமுனை போட்டி மட்டுமே இருந்த நிலையில் இவ்வருட தீபாவளி நான்குமுனை போட்டியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி, தம்பிராமையா, மனோபாலா, ரோபோசங்கர், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.