close
Choose your channels

ஜி.வி.பிரகாஷின் 'கிக்' செய்த மிகப்பெரிய சாதனை

Tuesday, August 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு திரைப்படம் தயாரிப்பில் இருக்கும்போதே ஃபர்ஸ்ட்லுக், டீசர், டிரைலர், இசை வெளியீடு ஆகியவை வெளியிடும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒரு படத்தின் வியாபாரமே மேற்கண்ட வெளியீடுகளுக்கு பின்னர்தான் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் உள்பட எதுவுமே இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டது என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சேலம் சிவா அவர்கள் எம்ஜி முறையில் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா, மொட்டை ராஜெந்திரன், மனோபாலா, ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்து வரும் இந்த படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.