close
Choose your channels

ஜி.வி.பிரகாஷின் 8வது படம் குறித்த முக்கிய தகவல்

Monday, July 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' உள்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வரும் ஜி.வி.பிரகாஷ், கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். இசை, நடிப்பு என ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் வெற்றிகரமாக பேலன்ஸ் செய்து வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது 'புரூஸ்லீ', கடவுள் இருக்குறான் குமாரு' மற்றும் ராஜீவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 'தனுஷ்' நடித்த 'ஆடுகளம்' படத்தை தயாரித்த ஸ்ரீக்ரீன் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் ஜி.வி.பிரகாஷின் 8வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பிரகாஷ், சத்யராஜ், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கவுள்ளார்.
முஸ்லீம் மெக்கானிக் என்ற கேரக்டரில் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும், சத்யராஜை கொலை செய்த வில்லன்களை ஜி.வி.பிரகாஷ் பழிவாங்குவதுதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது. நா.முத்துகுமார், அருண்காமராஜ் பாடல்கள் எழுத, திலீப் சுப்பராயன் சண்டைப்பயிற்சி செய்யும் இந்த படத்திற்கு விவேக் ஹர்சன் படத்தொகுப்பாளராக பணிபுரியவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.