close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு டிரம்ஸ் வாசிக்கின்றார் ஜி.வி.பிரகாஷ்

Tuesday, August 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி முன்னணி ஹீரோவாகவும் உள்ள ஜி.வி.பிரகாஷ் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் 'கடவுள் இருக்குறான் குமாரு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அவர் தற்போது ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்காக தயாராகி வருகிறார்.
இந்நிலையில் ராஜீவ்மேனன் படத்தில் ஜி.வி.பிரகாஷ், டிரம்ஸ் வாசிக்கும் கலைஞராக நடிக்கவுள்ளதாக படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷின் மாமாவும் ஆஸ்கார் விருது வென்றவருமான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக சாய்பல்லவி நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் முதல் தொடங்கவுள்ளது. இந்த படம் போக மேலும் ஜி.வி.பிரகாஷ் 'புரூஸ்லீ' என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி நடிகர் சித்தார்த்துடன் இணைந்து சசி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.