close
Choose your channels

அடுத்தடுத்து வெளியாகும் 'ரத்னம்' பட அப்டேட்டுகள்.. இன்று என்ன தெரியுமா?

Tuesday, March 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் புரட்சித் தளபதி விஷால் நடிப்பில் உருவான ‘ரத்னம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 26 என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் புரமோஷன் பணிகளையும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வெளிவந்துள்ள அடுத்த அப்டேட் ஆக இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் மார்ச் 29ஆம் தேதி வெள்ளி அன்று 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் நிச்சயம் ரசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, ட்ரைலர் ரிலீஸ் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவில், பாலாஜி கலை இயக்கத்தில், ஜெ படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.