close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'கருப்பன்' டிராக்லிஸ்ட் இதோ

Wednesday, August 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'விக்ரம் வேதா' சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த படமான 'கருப்பன்' வெகுவிரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஆல்பத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன.

1. 'கருவா கருவாப்பயலே' என்று தொடங்கும் முதல் பாடலை ஷங்கர் மகாதேவன், சாஷா திருபதி பாடியுள்ளனர்.

2. 'உசுரே உசுரே' என்று தொடங்கும் பாடலை அனன்யாபட் பாடியுள்ளார்.

3. 'ஒலக வாயாடி' என்று தொடங்கும் பாடலை பென்னி தயாள் பாடியுள்ளார்.

4. 'அழகழகே' என்று தொடங்கும் பாடலை பிரதீப்குமார் பாடியுள்ளார்.

5. 'முறுக்கு மீசை மாமா' என்று தொடங்கும் பாடலை திவகர், அனிதா வெங்கட் பாடியுள்ளனர்.


விஜய்சேதுபதி, தான்யா, பாபிசிம்ஹா, கிஷோர், பசுபதி, சிங்கம்புலி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் அவர்களின் ஸ்ரீசூர்யா மூவீஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தை 'ரேணிகுண்டா' இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.