close
Choose your channels

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் சூப்பர் ஸ்டாரின் பேத்தி

Tuesday, September 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப்குமாரின் பேத்தி சாயிஷா சைகல் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இவர் ஏற்கனவே அஜய்தேவ்கான் நடித்த Shivaay என்ற இந்தி படத்திலும் 'அகில்' என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். விஜய்-ஜெயம் ரவி இணையும் படத்தில் நடிக்க சாயிஷா சைகல் நடிக்க இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மிகவிரைவில் அவர் இந்த படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ள இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படம் ஆரம்பகட்டத்திலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.