close
Choose your channels

விஷால் போட்டியிட்டால் நானும் போட்டியிடுவேன்: பிரபல இயக்குனர் அதிரடி

Saturday, December 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக நடிகர் விஷால் அதிரடி முடிவெடுத்துள்ள நிலையில் விஷாலுக்கு போட்டியாக தானும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கவுள்ளதாக பிரபல இயக்குனர் அமீர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் விஷாலின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்றும் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில், நடிகர் விஷால் போட்டியிட காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பிய இயக்குனர் அமீர், விஷால் போட்டியிட்டால் தானும் அதே தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

மேலும் ஆர்.கே.நகரில் போட்டியிட்டால் சீமானின் நாம் தமிழர் வேட்பாளராகத்தான் போட்டியிட போவதாக கூறியுள்ளார். ஆனால் நாம் தமிழர் கட்சியில் கலைக்கோட்டுதயம் என்பவர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டு வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அமீரும் அக்கட்சி வேட்பாளராக போட்டியிடுவேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.