close
Choose your channels

'தளபதி 61' படத்தின் முக்கிய ஷெட்யூல் முடிந்தது

Monday, May 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் சென்னை மற்றும் ராஜஸ்தான் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் விஜய், நித்யாமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டில் விஜய், காஜல் அகர்வால் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்தது.
இந்த நிலையில் போலந்து படப்பிடிப்பும் தற்போது முடிந்துவிட்டதாகவும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து விரைவில் விஜய், அட்லி உள்பட 'தளபதி 61' படக்குழுவினர் சென்னை திரும்பவுள்ளதாகவும் சற்று முன்னர் தகவல்கள் வெளிவந்துள்ளது.
'தளபதி 61' படக்குழுவினர் சென்னை திரும்பியதும் விஜய், சமந்தா நடிக்கவுள்ள அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தேதிகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
பஞ்சாயத்து தலைவர், டாக்டர், மேஜிக்மேன் என மூன்று வித்தியாசமான வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் நித்யாமேனன் காஜல் அகர்வால், சமந்தா, என மூன்று ஹீரோயின்கள் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை தேனாண்டாள் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.