close
Choose your channels

இளையதளபதியின் 'பைரவா' சென்னை வசூல் குறித்த தகவல்

Monday, January 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் சென்னை பாக்ஸ் ஆபிஸ் விபரங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த வார இறுதி நாட்களில் சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடந்ததால் திரையரங்குகளில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களை தற்போது பார்ப்போம்

இளையதளபதி விஜய்யின் 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியான நிலையில் கடந்த வார இறுதி நாட்களில் இந்த படம் சென்னையில் 23 திரையரங்க வளாகங்களில் 280 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.73,52,770 வசூல் செய்தது. ஜல்லிக்கட்டு போராட்ட நிலையிலும் திரையரங்குகளில் 70% பார்வையாளர்கள் கூடியிருந்தனர். மேலும் இந்த படம் கடந்த 12ஆம் தேதியில் இருந்து நேற்று வரை ரூ.5,74,40,270 வசூல் செய்துள்ளது.

அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேனின் துருவங்கள் 16' திரைப்படம் சென்னையில் கடந்த வார இறுதி நாட்களில் 7 திரையரங்க வளாகங்களில் 50 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.13,98,340 வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் இதுவரையிலான மொத்த வசூல் ரூ.1,32,91,950 ஆகும். வசூல் அளவில் வெற்றி பெற்ற படங்களில் இதுவும் ஒன்று

வின் டீசல் மற்றும் தீபிகா படுகோனேவின் XXX Return of Xander Cage திரைப்படம் சென்னையில் கடந்த வாரம் 11 திரையரங்குகளில் 67 காட்சிகள் ஓடி ரூ.12,66,440 வசூல் செய்தது. 85 % பார்வையாளர்கள் நிரம்பியிருந்த இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.51,81,730 என்பது குறிப்பிடத்தக்கது.

அமீர்கானின் டங்கல் சென்னையில் கடந்த வாரம் 7 திரையரங்குகளில் 38 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.11,63,020 வசூல் ஆகியுள்ளது. உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.,26,99,970 ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.