close
Choose your channels

இதுதான் எங்கள் முதல் பத்திரிகை.. காதல் மாமாவுடன் திருமண தேதியை அறிவித்த இந்திரஜா..!

Monday, February 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்த நிலையில் தற்போது இந்திரஜா தனது வருங்கால கணவருடன் சேர்த்து திருமண தேதியை அறிவித்துள்ளார். இது குறித்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் ரோபோ சங்கர் மகள் மற்றும் ’பிகில்’ ’விருமன்’ உட்பட சில படங்களில் நடித்த இந்திரஜா தனது மாமா கார்த்திக் என்பவரை திருமணம் செய்யப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இந்த நிலையில் பிப்ரவரி 3ஆம் தேதி இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் வருகை தந்து எதிர்கால தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால கணவர், மாமா கார்த்திக் உடன் இணைந்து எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது திருமண தேதியை அறிவித்துள்ளார். வரும் மார்ச் 24 ஆம் தேதி திருமணம் என்றும் இதுதான் எங்கள் முதல் பத்திரிகை என்றும் எங்களுக்கு நீங்கள் அனைவரும் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்றும் இந்திரஜா குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.