close
Choose your channels

'இந்தியன் 2' படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும் படக்குழு.. எந்தெந்த நாடுகள் தெரியுமா?

Wednesday, March 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். இரவு பகலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக கமல்ஹாசனின் காட்சிகள் அதிகாலை 4 மணி வரை படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற அதிரடி ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைதாகவும், இதனை அடுத்து கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தென் ஆப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசன் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வரும் நிலையில் பட குழுவினர்களும் விரைவில் வெளிநாடு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விடும் என்றும் அதன் பிறகு தொழில்நுட்ப பணிகளை தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.